பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம்

61
0
Spread the love

 

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 11,320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரைக் கைது செய்தனர்.

குறித்த நபரை சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த கையடக்க தொலைபேசியில் பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குரல் பதிவுகள் இருந்துள்ளது.

இதன் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் 22, 30 மற்றும் 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here