ரயிலொன்றில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அம்பலாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை (28.07) முதல் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹிக்கடுவையிலிருந்து மருதானை நோக்கிச்சென்ற ரயிலொன்றிலேயே தொழினுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
தற்போது ரயில் பாதையை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.







