ரயில் சாரதிகள் இன்று (29.07) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில், 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமிஞ்சை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்; கே.ஏ.யு. கொண்டசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக, தீர்வு காணப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.







