இந்திய மீனவர்கள் ஐவர் கைது விசைப்படகும் பறிமுதல்

50
0
Spread the love

 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இன்று அதிகாலை (29.07) அவர்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விசைப்படகொன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here