10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் பறிமுதல்

54
0
Spread the love

 

பொரளை பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொரளை சிறிசர உயன தொடர்மாடி குடியிருப்புக்கு
அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்தபோது போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 1 கிலோ 105 கிராம் ஐஸ் மற்றும் 125 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்பதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரின் உதவியாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here