அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரி ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

50
0
Spread the love

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி ஹட்டன் நகரில் இன்று (31.07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் இதன்போது கையேடுகளும், விநியோகிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மக்கள் போராட்ட இயக்கம் ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டன.

பெருந்தோட்ட மக்களுக்கு உண்மையான குடியுரிமையை வழங்குமாறும், தோட்ட அடிமை முறையை முடிவுறுத்துமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here