நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது மீன்பிடி படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மைலட்டி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்







