யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து – ஒருவர் பலி

53
0
Spread the love

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று இரவு (10.8) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து யாழப்பாணம் நோக்கி பயணித்த காரும் – யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த இரு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மேலும் மூவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் 35 வயதான நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here