யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றிற்குள் நுழைந்த மூவர் கூரிய ஆயதங்களால் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களால் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதன்போது தாக்குதலைத் தடுக்க முயற்சித்த இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







