இலங்கையில் தன்பாலின உறவை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அதற்கான செயற்பாடுகளில் வெளிநாட்டு அமைப்புகள் மும்முரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது நாட்டிற்கு ஆபத்தான நிலை எனவும், அவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் நாட்டின் கலாசாரம் சீர்கெடும் நிலை உருவாகும் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
பாலினம் தொடர்பில் சிக்கல் ஏற்படுவோருக்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட உளநல மருத்துவர் ஊடாக சான்றிதழ் பெற்றுக் கொடுக்கப்பட்டு,
பாலின திரிபை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனூடாக குறித்த வெளிநாட்டு அமைப்புகள் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளை தன்பாலின உறவில் உள்வாங்கும் செயற்பாடுகளில்
ஈடுபட்டுள்ளதாகவும் கர்தினால் கூறியுள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகள் இளம் சமூகத்தை சீரழிக்கும். எனவே, பாலினத்திற்கான உரிமைகள் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும்
எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.







