மன்னாரில் 15 ஆவது நாளாக இன்றும் தொடர் போராட்டம்

74
0
Spread the love

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 ஆவது நாளாக இன்றும் (17.08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்றைய தினம் ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் பங்கேற்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களும் மதத் தலைவர்களும்,அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்கள் முழுமையாக கைவிடப்படும் வரை
தமது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here