தந்தையின் மறைவையடுத்து நாடு திரும்பிய துனித்

150
0
Spread the love

தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே இன்று (19.09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் இன்று காலை 08.25 க்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392 மூலம் அபுதாபியிலிருந்து நாட்டை வந்தடைந்தார்.

அவருடன் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவரும் நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் மிக விரைவாக விமான நிலையத்திலிருந்து வெளியேறிதாக தெரிவிக்கப்படுகிறது.

துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18.09) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துனித் விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here