ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 08 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் இடம் பெற்றுள்ள 08 அணிகள் A மற்றும் B என 02 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
B பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங் மற்றும் இலங்கை அணிகள் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒருமுறை போட்டியிட வேண்டும்.
இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் நான்கு அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை போட்டியிட வேண்டும். முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.







