உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச் சபையின் 80 ஆவது கூட்டத்தில் உரையாற்றிய போதே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,
உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. வலுவான பொருளாதாரம், வலுவான இராணுவம், வலுவான எல்லைகள், வலுவான நட்புறவை அமெரிக்கா பெற்றுள்ளது.
வேறு எந்த நாடும் அமெரிக்காவை நெருங்க முடியாது. ஜனாதிபதியாக எனது முதல் ஆட்சியில் அற்புதமாக செயல்பட்டேன். இப்போது இரண்டாவது ஆட்சியிலும் அதை தொடர்வேன். அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுத்துள்ளேன். குடியேற்ற விவகாரத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
கம்போடியா – தாய்லாந்து, காங்கோ – ருவாண்டா, இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – ஈராக், எகிப்து – எத்தியோப்பியா, அர்மேனியா – அஜர்பைஜான் உட்பட 07 போர்களை நிறுத்தி உள்ளேன். இதை ஐ.நா செய்திருக்க வேண்டும். ஆனால், அதை நான் செய்தேன். அதற்காக ஐ.நா எனக்கு பாராட்டு கூட தெரிவிக்கவில்லை.
மனித குலத்துக்கு அணு ஆயுதம் பேராபத்தாக உள்ளது. இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்தத்தை உறுதி செய்ய வேண்டும்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது ஹமாஸுக்கு நன்ளையளிக்கும்
இஸ்ரேல் – காசா இடையிலான அமைதி உடன்படிக்கையை அவர்கள்தான் நிராகரித்து வருகின்றனர். பலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடு.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறேன். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு இந்தியாவும், சீனாவும் நிதி உதவி அளிக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து அவர்கள் கச்சா எண்ணெய் வாங்குவதுதான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பாவும் தலையிட வேண்டும்.
அமெரிக்காவுக்கு கடும் வரி விதிப்பவர்களுக்கு வரி விதித்துள்ளோம்” என்றார்.







