கிளிநொச்சியில் அகழ்ந்தெடுக்கப்படாத நிலையில் காணப்படும் வெடிகுண்டு

259
0
Spread the love

கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இன்னும் பல வெடி குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் (29.6) இரு நபர்கள் குண்டினைப் பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது  விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது பல பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளது. அதனை அகழ்ந்து எடுப்பதற்கு நீதி மன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த பிரதேசம் முழுவதும் மனிதாபிமான கன்னி வெடி அகற்றுதல் எனும் தொனிப்பொருளில் வெடிகுண்டுகள் அகற்றப்பட்ட நிலையில் அத் தொண்டு நிறுவனம் தமது பணியினை ஒழுங்காக செய்து இருந்தால் இவ்வாறான பாரியளவு விபத்துக்கள் ஏற்பட்டு இருக்காது என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


லின்ரன் யாழ்ப்பாண செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here