மாத்தளையில் கைவிடப்பட்ட சிசுவை மீட்ட பொலிஸார்

131
0
Spread the love

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில், சிசு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சிசு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இப்பலோகம பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டில், முன் நாற்காலியில் வைக்கப்பட்ட
நிலையில் பிறந்து ஒரு மாதமேயான சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சிசு, நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த உடல் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here