யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து ஆயுதம் ஒன்றினால் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து
அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் சுண்ணாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் இந்த கொலை சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







