“சமட்ட நிவஹன” மானிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.

233
0
Spread the love

தேசிய வீமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 10 லட்சம் ரூபாய் மானிய நிதிப் பங்களிப்புடனும் பயனாளிகளின் முயற்சியிலும்,”உங்களுக்கு ஒரு வீடு, நாட்டிற்கு ஒரு அபிவிருத்தி” என்னும் கருப்பொருளில், நாடு முழுவதிலும் நிர்மாணிக்கப்பட்ட 4000 வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (05.09)தேசிய ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலாளர் பிரிவு, முசலி பிரதேச செயலாளர் பிரிவு நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய ஐந்து பிரிவுகளிலும் தலா6 வீடுகள் வீதம் 30 வீடுகள் பயனாளிகளுக்குப் பகிர்ந்த ளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்விலே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமாகிய மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன்,

மடு பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நானாட்டான் பிரதேச செயலாளர்,நானாட்டான் பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாந்தை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர், முசலி பிரதேச செயலாளர்,மாவட்ட முகாமையாளர் தேசிய வீடமைப்பு அதிகார சபை,திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீடுகளைப் பயனாளிகளிடம் வழங்கி வைத்தனர்.

ரோகினி நிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here