இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்களிடமிருந்து 05 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.
நேற்றிரவு(08.10) மற்றும் இன்று(09.10) அதிகாலை வேளைகளில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் படகுடன் 17 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் 04 படகுகளுடன் 30 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.







