இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

140
0
Spread the love

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 30 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இந்த மீனவர்கள் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகம் மற்றும் கடற்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here