உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டிற்கு வருகை

144
0
Spread the love

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12.10) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் 8 ஆவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இவர் இன்று முற்பகல் 9.40 அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 660 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது அவரை சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வரவேற்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு நாளை (13.10) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற உள்ளது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த மாநாட்டிற்காக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here