மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

130
0
Spread the love

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாள் (21.10) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய மத்திய மாகாண ஆளுநரால் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25.10) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கும் தீபாவளிக்கு அடுத்தநாள் 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here