இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சியென இந்திய பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய அண்டை நாடுகளாக, இரு நாட்டு மக்களின் செழிப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு இரு நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.






