ஜீவன் தொண்டமானின் வாழ்த்துச் செய்தி

179
0
Spread the love

தீபாவளியை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

“அனைவரின் வாழ்விலும் ஒவ்வொரு தருணமும் வெற்றி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நிரம்பியதாக மலரட்டும்”

“தீப ஒளியில் இருள் விலகுவது போல், உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்திருக்கட்டும். இந்த தீபாவளி பண்டிகை உங்கள் வாழ்வில் புதுமையான ஒளிகளை கொண்டு வந்து, மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தட்டும்.”

எமது நாட்டை சூழ்ந்துள்ள இருள் அகன்று, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இதுவாகும். தீபாவளி பண்டிகையானது எம்மிடத்தில் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆகையால், எமது மலையக மண்ணின் மறுமலர்ச்சிக்காகவும் நாம் ஒன்றுபட வேண்டும்.

மேலும் நாம், எதைச் செய்தாலும் பாதுகாப்பு என்பது எமக்கு மிக முக்கியமானதாகவும். தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். இல்லாதவர்களுக்கு நம்மிடமுள்ளதை பகிர்ந்து, அவர்களின் முகத்திலும் புன்னகையை மலரச் செய்வோம். நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்.

மகிழ்ச்சியான இந்த தீபாவளி நாளில் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும். இறைவன் அனைவருக்கும் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பு அருளட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! என தீபத் திருநாளில் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here