கிளிநொச்சி பெருமளவான போதைப்பொருளுடன் இருவர் கைது

177
0
Spread the love

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 48 கிலோ 400 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் இன்று (15.10)
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொரு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here