கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி பலர் காயம்

319
0
Spread the love

கொழும்பு -மன்னார் ரத்னா ரவல்ஸ் சொகுசு பேருந்து
மதவாச்சி மன்னார் பிரதான வீதி ஆண்டியாபுளிங்குளம் பகுதியில் இன்று(22.10) புதன்கிழமை  அதிகாலை  விபத்துக்குள்ளானதில்,
ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம்  குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று (21) இரவு 8.30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து மதவாச்சி தலைமன்னார் பிரதான வீதியில், ஆண்டியாபுளியங்குளம் மற்றும் பெரியகட்டிற்கு இடைப்பட்ட பகுதியிலே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த பயணிகள் வவுனியா மற்றும் மன்னார் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here