சீரற்ற வானிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 335 ஆகும்.
இதனிடையே, அவிசாவளை – மடோல பகுதியில், நேற்று பிற்பகல் ( 21.10) பயிற்சி வகுப்புகளில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, வடிகாலில் விழுந்து சுமார் 80 மீட்டர் தூரத்துற்கு நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை, அடுத்த 12 மணி நேரத்திற்குள் குறைந்த அழுத்த நிலையாக உருவாக வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று காலை 8.30 உடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைப்பொழிவு காலி – சிறிகந்துர தோட்டத்தில் பதிவாகியுள்ளது.
அங்கு 241 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது.
இதேபோல், காலியின் மொன்ரோவியா பகுதியில் 229.2 மி.மீ. மழையும், காலி – பலபிட்டிய பகுதியில் 178.6 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.







