லங்கா பிரிமியர் லீக் தொடர் இந்த ஆண்டு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (22.10) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.







