யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் செம்மணி இன்றையதினம் (30.10) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி புதைகுழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பேரணியாக செம்மணிச் சந்திவரை சென்றது.
பின்னர் உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலிக்காக செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு தூபியடியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது பேராயர்கள், கிறிஸ்தவ மதகுருக்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







