வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவுத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், விலங்கு நலனையும் சமூக சுகாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் 54வது காலாட்படைப் பிரிவு நடத்திய இலவச விலங்கு சுகாதார முகாம், மடு தேவாலய மருத்துவமனையில் ஒக்டோபர் (25.10) தொடக்கம் நேற்று வரை (29.10)வரை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த இலவச விலங்கு சுகாதார முகாம் நிகழ்ச்சி திட்டமானது வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் K.M.P.S.B. குலதுங்கவின் யோசனைக்கு அமைவாக 54வது காலாட்படைப் பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் A.M.C. அபயகோனின் வழிகாட்டுதலின் கீழ், Vet for Future (Pvt) Ltd நிறுவனத்தின் இயக்குநர், வைத்தியர் சாமித் நானயக்கார அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் 542வது காலாட்படைப் பிரிவின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
குறித்த இலவச விலங்கு சுகாதார முகாமில்,மடு பிரதேசத்தில் உள்ள தெரு நாய்கள், மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தேவையான புண் சிகிச்சை, நோய் தடுப்பு தடுப்பூசி, விசர்நாய்க்கடி (rabies) தடுப்பூசி மற்றும் பிற மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
இம்மனிதாபிமான முயற்சிக்கு உள்ளூர் மக்கள், தேவாலய மதகுருமார்கள், மற்றும் சமூக அமைப்புகள் பெரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விலங்கு சுகாதார முகாம் நிகழ்ச்சித்திட்டமானது 4வது கஜபா படைப்பிரிவினரால் நுட்பமாக திட்டமிட்டபட்டு, 542வது காலாட்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் A.R.W.C. அசுரசிங்கவின் மேற்பார்வையில் 5 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .











