பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும்.
அதன் மொத்த செலவினம் 12,000 மில்லியன் ரூபாவாகும்.
சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.
இன்று (07.11) சமர்ப்பிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும்.







