வட மாகாணத்தில் தாதியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

99
0
Spread the love

வட மாகாணத்தில், அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி நாளை (12.11) காலை 07 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாண வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் வௌியேறும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வட மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இருக்காது என சுட்டிக்காட்டியுள்ளது.

வடமாகாணத்தில் மாத்திரம் தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான விடயமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here