A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பஸ் தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







