தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

148
0
Spread the love

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 489 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் செனூரன் முத்துசாமி 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதற்கமைய 288 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்தநிலையில் இந்திய அணிக்கு 549 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி 549 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 140 ஓட்டங்களுக்குள் தோல்வியுற்றது.

இதற்கமைய தென்னாப்பிரிக்க அணி 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here