இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது மனைவியான சீதை ஸ்ரீ நாச்சியாருடன் இன்று (26.11) நாட்டை வந்தடைந்தார்.
அவர்கள், இந்தியாவின் திருச்சியிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-132 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இந்தியாவில் கடந்த 23 ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , எம்பியுமான ஜீவன் தொண்டமான் திருமணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பல இலங்கை, இந்திய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








