வழமைக்கு திரும்பியது மன்னார் பஸ் போக்குவரத்து சேவை

178
0
Spread the love

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்த மன்னார் மதவாச்சி ஏ 32 ஊடான பஸ் போக்குவரத்து சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது .

கடந்த ஒரு வார காலமாக டிட்வா புயல் மற்றும் தொடர்ச்சியாக பெய்து வந்த கன மழையினால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில், மன்னார் மாவட்டமும் பாதிப்பிற்குள்ளாகி போக்குவரத்து முற்றுமாக துண்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது பாதையை மூடிப்பாய்ந்த வெள்ள நீர் வடிந்து நிலைமை வளமைக்கு திரும்பியுள்ள நிலையில், போக்குவரத்துச் சேவை இன்றைய தினம் (02.12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் யாழ்ப்பாண பஸ் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here