மின் கட்டண நிலுவைகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படாது

135
0
Spread the love

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் குடியிருப்புகளுக்கான மின் கட்டணத்தில் நிலுவைகள் இருந்தாலும் குறித்த இடங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாதென மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்துள்ளார்.

அது சார்ந்த கட்டணங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படும் கட்டண பட்டியல்களுடன் இணைக்கப்படுமெனவும், தற்போதைய சூழலில் எவ்வித மின் துண்டிப்பும் மேற்கொள்ளப்படமாட்டாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் மின் வாசிப்பு சேதமடைந்துள்ளது. அத்துடன் மின் கட்டண பட்டியலை விநியோகிப்பதிலும் சிக்கல் உள்ளது.

இதனால் குறித்த இடங்களுக்கான மின் கட்டண பட்டியல்கள் எதிர்வரும் மாதங்களில் வழங்கப்படுமெனவும், துண்டிப்பு எதுவுமின்றி மின் விநியோகம் தொடர்ச்சியாக வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here