பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டும்

198
0
Spread the love

நாட்டை உலுக்கிய வெள்ள அனர்த்தம் மன்னார் மறைமாவட்டத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

சிலர் தம் இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து எண்ணில்லாத பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான விளைநிலைங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன.

கால்நடைகள் பல இறந்துள்ளன. இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகள் அரசினாலும் நம் மறைமாவாட்டத் திருச்சபையாலும் ஏனைய
சில பொது அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதிப்புக்கு உள்ளாகாத மக்கள் பெருந்தன்மையோடு உதவிக் கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென
இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம் என கத்தோலிக்கருக்கு ஆயர்களால் திருவருகைக்காலத்தில் வழங்கும் திருமடலில் மன்னார்
மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை திருவருகை காலத்தை முன்னிட்டு மன்னார் இறைமாக்களுக்கு வழங்கியுள்ள
செய்தியில் தெரிவித்துள்ளார்.

திருமடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் வழங்கியுள்ள மடலில் மேலும் தெரிவித்திருப்பதாவது

“இயேசுக் கிறிஸ்துவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
‘நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!’ (உரோமையர் 1:1).
திருவருகைக் காலம்
திருவருகைக்காலம் இறைபற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகிறது. இயேசுவின் பிரசன்னத்தை – உடனிருப்பை
ஆழமாக உணருகின்ற ஒரு சிறப்பான சந்தர்ப்பம் இந்தத் திருவருகைக்காலம். ‘கடவுள் நம்மோடு இருக்கின்றார்’ என்ற ஆறுதலின் செய்தியை தனது திருப்பிறப்பின் மூலம் இறைமகன் இயேசு மீளவும் இந்நாட்களில் நமக்கு வலியுறுத்துகின்றார்.

எனவே கடவுளின் உடன் இருப்பையும், அவருடைய அளவுகடந்த அன்பையும் இன்னும் ஆழமாக இந்தக் காலத்தில் உணர்ந்து, இறைமகன் இயேசுவின்
வருகைக்கு நம்மை தகுந்தமுறையில் ஆயத்தம் செய்வோமாக!

மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடு
ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடு இவ்வாண்டும் கடந்த ஒக்ரோபர் மாதம் 27, 28, 29
ஆகிய தினங்களில் மன்னாரில் சிறப்பாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்டத்தில் ‘தூய ஆவி’யின் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூய ஆவியை மையப்பொருளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என ஏறக்குறைய
200 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இத்தீர்மானங்களை அடியொற்றி ஒவ்வொரு பங்கும், ஆணைக்குழுவும், துறவற இல்லமும் தமது சூழ்நிலை, வசதி, வாய்ப்புக்களைக் கவனத்தில்கொண்டு
தமக்கான பிரத்தியேகமான மேய்ப்புப்பணித் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

இந்த மாநாட்டின்போது பங்குகள் ரீதியாக எடுக்கப்படும் தீர்மானங்களையும் உள்ளடக்கியதாக பங்குமட்ட இறுதித் தீர்மானங்கள் அமைய வேண்டும்.
புதிய ஆண்டின் முதல் நாளில் இருந்து புதிய ஆண்டுக்கான மேய்ப்புப்பணித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மறைமாவட்டம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள்
மன்னார் மறைமாவட்டத்தில் காற்றாலைகளை அமைக்கும் திட்டமும் கனிய மண் அகழ்வுத் திட்டமும் பாரிய பிரச்சினைகளாக உள்ளன.
மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாடிகளோடு மேலும் 14 காற்றாடிகள் அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஆயினும் இனிவரும் காலங்களில் மேலதிகமாக காற்றாடிகள் அமைக்கப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டை அமைச்சரவைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசாங்கம் தந்துள்ளது.
எனவே இதனையொட்டி மன்னாரில் இடம்பெற்றுவந்த மக்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

கனிய மண் அகழ்வு மன்னார் தீவினுள் முற்றாக இடம்பெறாது என்ற வாக்குறுதியையும் அரசாங்கம் தந்திருக்கின்றது.
கனிய மண் அகழ்வுக்கான நிறுவனங்களின் அலுவலகங்கள் மன்னாரில் இயங்க முடியாது எனவும், கனிய மண் அகழ்வு ஒருபோதும் நடைபெறாது எனவும் அமைச்சரவைத்
தீர்மானம் நிறைவேற்றவும் அரசு வாக்குறுதி தந்துள்ளது. அரசு மக்களுக்குக் கொடுத்த இந்த வாக்குறுதியை தவறாமல் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

முழு இலங்கை நாட்டையும் உலுக்கிய வெள்ள அனர்த்தம் நம்முடைய மறைமாவட்டத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. நம் மக்களில் சிலர் தம் இன்னுயிரை இழந்துள்ளனர்.
பலர் அகதிகளாக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து எண்ணில்லாத பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான விளைநிலைங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன. காலநடைகள் பல இறந்துள்ளன. இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகள் அரசினாலும் நம் மறைமாவாட்டத்
திருச்சபையாலும் ஏனைய சில பொது அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்புக்கு உள்ளாகாத மக்கள் பெருந்தன்மையோடு உதவிக் கரம் நீட்டி,
பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான முழுமையான இழப்பீடுகள் வழங்கப்பட்டு, மக்கள் தம் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்.

நாட்டின் இன்றைய சூழ்நிலை
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தைக் கட்டுப்படுத்தவும்,
பொருளாதரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற
மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இதுவரை ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே இந்தச் சூழ்நிலையில் தமிழர்நலன் சார்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளும்
ஏனைய அமைப்புக்களும் ஒற்றுமையோடு செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ந்து பற்றுறுதியோடு ஒன்றுபட்டு உழைக்கவேண்டுமென
கேட்டுக்கொள்கிறேன்.

;எம்மில் பலர் அகதிகளாக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து எண்ணில்லாத பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான விளைநிலைங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன. காலநடைகள் பல இறந்துள்ளன. இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகள் அரசினாலும் நம் மறைமாவாட்டத்
திருச்சபையாலும் ஏனைய சில பொது அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்புக்கு உள்ளாகாத மக்கள் பெருந்தன்மையோடு உதவிக் கரம் நீட்டி,
பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான முழுமையான
இழப்பீடுகள் வழங்கப்பட்டு, மக்கள் தம் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம்.
‘தம் வருகைக்காக விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்கும் நீதியுள்ள நடுவர் நீதியின் வெற்றி வகையைத் தருவார்’ (2 திமொ 4:8).
நிறைவாக ‘ஆண்டவரின் காலத்தில் நீதி தழைத்தோங்கும்’ (திபா 72:7). ‘விண்ணில் இருந்து விடியல் நம்மைத் தேடிவரும்’ (லூக்.1:79) இத்திருவருகைக் காலத்தில் நாம்
நம்பிக்கையில் தளர்வுறாது தொடர்ந்து வாழ்வோமாக

உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ் புதுவருட நல்வாழ்த்துக்களையும் இறை ஆசீரையும் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை நாட்டின் திருத்தூதரான தூய
யோசவ்வாஸ் அடிகளாரின் பரிந்துரை நமக்குக் கிடைப்பதாக! நமது மறைமாவட்டத்தின் பாதுகாவலியாகிய மடு அன்னை நம்மோடு பிரசன்னமாக இருந்து தாய்க்குரிய
பாசத்தோடு நம்மை வழிநடத்துவாராக என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(வாஸ் கூஞ்ஞ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here