விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9.30 க்கு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பேரிடர் நிலைமைகள் தொடர்பில் இந்தக் கூட்டத் தொடரில் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







