மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

109
0
Spread the love

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர, மேல் கோரளை, தொலுவ, பன்வில, தெல்தொட்ட, உடுதும்பர, மினிப்பே மற்றும் உடபலாத
ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்
திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here