சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட் தொகையுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் துறைமுக அதிகாரிகள் என தெரியவந்துள்ளது. கலால் திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளினால் வெல்லம்பிட்டிய பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.







