பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

230
0
Spread the love

திக்வெல்ல – பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here