மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியல் யாப்பிற்காக செயல்படுவோம் – மன்னாரில் கலந்துரையாடல்

154
0
Spread the love

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் (NAFSO) ஏற்பாட்டில் “மக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற ஒரு அரசியல் யாப்பிற்காக செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் இன்று (27.07.) காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட கிராமிய அபிவிருத்தி நிறுவன (RDF) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் நீடித்த ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், அவற்றிற்கான நீதியும் நல்லிணக்கமும், மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார், பெண்கள் திட்ட இணைப்பாளர் சுபாசினி கமலநாதன் மற்றும் வளவாளர் ரோய் ரொட்ரிகோ ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தின் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு, மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதன் அவசியம் தொடர்பாக தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here