கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தகவல் ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட செயலகக் கட்டிடத்திற்குள் இருந்த அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.






