யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைத்தியசாலைப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
அத்துடன் வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மனிதவளத் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து நவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கி வைத்ததுடன், வைத்தியசாலையின் நூதன சாலையையும் பார்வையிட்டார்.
கடந்த மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீப்பரவல் ஏற்பட்ட மருந்து களஞ்சியசாலையையும் அமைச்சர் இதன்போது பார்வையிட்டார்.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , இளங்குமரன் , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்







