தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

79
0
Spread the love

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக
மாத்தறை நோக்கிய திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13.01) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

எவ்வாறாயினும் விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here