நாசாவில் இருந்து ஓய்வை அறிவித்தார் சுனிதா வில்லியம்ஸ்

153
0
Spread the love

மூன்றாவது முறை விண்வெளிக்கு சென்று, 608 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி அசாத்திய சாதனைகளை படைத்துள்ள சுனிதா வில்லியம்ஸ் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதை அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணியில் சேர்ந்தார்.

2006 ஆம் ஆண்டு முதன்முறையாக, விண்வெளி பயணத்தை தொடங்கிய சுனிதா வில்லியம்ஸ், 2007 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பினார்.

அதன் பிறகு, 2012 ஆம் ஆண்டு ரஷ்யாவின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

இதன் நீட்சியாக, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் திகதி, 8 நாட்களில் பூமிக்கு திரும்பி விட வேண்டும் என்ற திட்டத்தில் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 09 மாதங்களை கடந்தும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கினார்.

சுமார் 286 நாட்களுக்கு பிறகு, கடந்தாண்டு மார்ச் மாதம் சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.

இதன் மூலம், விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண் என்ற சாதனையும் சுனிதா வசமானது.

இந்நிலையில், 27 ஆண்டுகள் நாசாவில் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ் கடந்த கிறிஸ்துமஸ் முதல் பணி ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here