2026 டி-20 உலகக் கிண்ணம் – டிக்கெட் விற்பனை நாளை ஆரம்பம்

161
0
Spread the love

இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் ஆரம்பமாகும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஐந்து இடங்களில் டிக்கெட் கரும பீடங்கள் திறக்கப்படும்.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைமையகம் (SLC), ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஒருகொடவத்தை டிக்கெட் கருமபீடம், பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் பலகொல்லையிலுள்ள அபிதா மைதானம் ஆகிய இடங்களில் இந்த கரும பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விற்பனை நிலையங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும்.

இலங்கை அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகளும், ஏனைய போட்டிகளுக்கு ஒருவருக்கு 10 டிக்கெட்டுகள் வரையிலும் வழங்கப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டிக்கெட்டுகள் 1,000 ரூபா முதல் 10,000 ரூபா வரையிலான விலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here