நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

23
0
Spread the love

நாட்டின் பல மாகாணங்களிலும் இன்றைய தினம் (31) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுமே மேற்படி மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அவதானிப்பு:
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் அசௌகரியங்களையும் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தாமதமின்றி எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலை காணப்படக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here