வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்ஸப் இலக்கம்

143
0
Spread the love

பொதுப் போக்குவரத்துச் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வட்ஸப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

0719090900 என்ற இந்த இலக்கத்தினூடாக போக்குவரத்து விதி விதிமீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்களிடமிருத்து ஆதாரங்களுடன் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை உடன் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தயங்காமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here